உண்மை நின்றிட வேண்டும்!
Tuesday, 2. October 2007

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தினமும் இன்பம் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்;கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரியகடவுள் காக்க வேண்டும்;மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்,
ஓம் ஓம் ஓம் ஓம்.


