உபன்யாசம்
Tuesday, 7. July 2009
“நவீனத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு பழைமையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்வதுதான் ஆன்மிகம் என்று யாரும் சொல்லிவிடவில்லை. பயப்படவேண்டாம்”, தனக்கேயுரிய சிரிப்போடு பேச்சை ஆரம்பிக்கிறார் தயானந்த சரஸ்வதி சுவாமிகள். செல்பேசி இல்லாமல் உயிர்வாழ முடியாது என்று அவர் விளக்கத்தை தொடரும்போதே பின்வரிசையிலிருந்து செல்பேசி ஒலிக்கிறது. எங்கும் சிரிப்பொலி.
காமராஜர் ஹால் நிரம்பியிருக்கிறது. இருக்கை கிடைக்காமல் நடைபாதையோரமாய் ஒடுங்கி உட்கார வேண்டியிருந்தது. இருபதுகளில் ஆரம்பித்து எண்பதுகள் வரை வயது வித்தியாசமின்றி நிறைய பேர் வந்திருந்தார்கள். பத்மா சுப்ரமணியத்திடம் சொர்ணமால்யா ஏதோ சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தார். கணவரோடு வந்திருந்து அவ்வபோது கண்மூடி தியானித்த அனுராதா ஸ்ரீராம், சகோதரர் சகிதம் வந்திருந்து கடைசிரை செல்போனை ஸ்பீக்கர் பக்கம் வைத்திருந்த லதா ரஜினிகாந்த் என விஐபிக்கள் கூட்டம் முன்வரிசையில். ஒவ்வொரு ஜூன் மாதமும் நடப்பதுதான். ஒரு வார காலமாக மாலைவேளைகளில் நடைபெற்று வந்த சுவாமிஜியின் உபன்யாச கூட்டத்திற்கு குறைச்சலில்லை. Turning Adversity to One’s advantage – இதுதான் சுவாமிஜி பேசிய தலைப்பு.
தொடர்ந்து படிக்க….http://www.tamilhindu.com/2009/07/dayananda_saraswathi/


