உறவுகள் விடுகதை

Thursday, 4. February 2010

அதுவொரு பஞ்சாயத்து. ஆலமரம் இல்லை.  நாற்காலி இல்லை. சொம்பு கூட இல்லை. சந்தனத்தை பூசிக்கொண்டு சரத்குமார், வினுச்சக்கரவர்த்தி சாயலில் கூட யாருமில்லை. சுற்றிலும் அறுபதை தாண்டிய வயதிலிருக்கும் கிழவர்கள். கூட்டத்துக்கு நடுவே நின்றபடி ஒரு கிழவர் ஆவேசமாக பேகிறார். இது இந்தப் பஞ்சாயத்தோட தீர்ப்பு. அதுக்கு அல்லாரும்  கட்டுப்பட்டுத்தான் ஆகணும். கட் செய்தால் அடுத்த ஷாட். இது பஞ்சாயத்தோட தீர்ப்பு. கட்டுப்பட்டுத்தான் ஆகணும். அதுதான் இங்கே நடைமுறை. இதுக்கு மேல் சொல்றதுககு எதுவுமில்லை என்று சவுண்ட் பைட் கொடுக்கிறார் இன்னொருவர்.
ஹரியானா மாநிலம் ரோடாக் கிராமம். திருமணமாகி, மூன்று ஆண்டுகள் குடும்பம் நடத்திய பின்னர் கையில் பத்து மாத குழந்தை. சம்பந்தப்பட்ட தம்பதிகளை தீர விசாரித்த பின்னர் இருவரும் அண்ணன், தங்கை என்கிற அரும்பெரும் உண்மையை பஞ்சாயத்தார் கண்டுபிடித்திருக்கிறார்கள். காரணம், இருவரும் ஒரே கோத்ரமாம். ஆறு மணி நேர பஞ்சாயத்துக்குப் பின்னர் அதிரடியான தீர்ப்பு வெளியானது. இனி தம்பதிகள் இருவரும் சகோதர, சகோதரிகளாம்.
ஹரியானா பஞ்சாயத்து அதிரடியான தீர்ப்புகளுக்குப் பேர் போனது. பஞ்சாயத்து பெரிசுகளெல்லாம் சின்ன தம்பி பி.வாசுக்கும் நாட்டாமை கே.எஸ். ரவிகுமாருக்கும் முன் தோன்றிய மூத்த குடிமக்கள். அம்மணமாக்கி அடி கொடுப்பது முதல் ஒரே பெண்ணை இருவருக்கு திருமணம் செய்து வைப்பது வரையிலான பல புரட்சிகர தீர்ப்புகளுக்கு சொந்தக்காரர்கள்.
சதீஷ் பெர்வால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கவிதாவை மணந்தபோது யாரும் தடை சொல்லவில்லை. குழந்தையெல்லாம் பிறந்த பின்னரே சகோதர கள்ள உறவு வெளிச்சத்துககு வந்திருக்கிறது. பஞ்சாயத்தார்களுக்கு இதைவிட வேறென்ன வேலை? அதிரடியாக தீர்ப்பும் எழுதிவிட்டார்கள். 28 நாட்களுக்குள் கவிதா பிறந்த வீடு திரும்ப வேண்டுமாம். சொத்தை விற்று, கடன் வாங்கியாவது 3 லட்சத்தை மகனின் பேரில் டெபாசிட் செய்துவிட்டு சதீஷ் எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டுமாம். நல்லவேளை, மகனை பெற்றெடுத்தார். மகளாக இருந்திருந்தால் இனி தாய் மாமன் ஸ்தானத்தில் இருந்து சீர் வரிசையெல்லாம் செய்யவேண்டும் என்றும் தீர்ப்பு எழுதியிருப்பார்களோ?
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது சம்பந்தமாக யாரும் எங்களிடம் புகார் கொடுக்கவில்லை.  புகார் வந்ததும் தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்கிறது ஹரியானா மாநிலத்தை காக்கும் கடமை தவறாத காவல்துறை.
போன வாரத்தின் பெரிய துன்பியல் சம்பவமாக இதைச் சொல்லலாம். இப்படியெல்லாமா நடக்கும் என்கிற வியப்புதான் பத்தரை மணிக்கு அவசர அவசரமாக சேனல் மாற்றும்போது இருந்தது. போகப்போக விஷயத்தின் தீவிரம் உள்ளுக்குள் இறங்கியது. ஹரியானா என்ன தமிழ்நாட்டிலேயே இப்படித்தான் நடக்கிறது. எங்க ஊர் பக்கம் வந்து நாயக்கர் ஆளுங்கக்கிட்ட கேட்டுப்பாருங்க என்றாள் மனைவி. அதைப் பற்றி இன்னொரு நாள் எழுதலாம்.
இனி என்ன செய்யப்போகிறேன் என்றபடியே அழுத அந்தப் பெண்ணின் சோகமான முகம் அவ்வப்போது கண்முன் வந்து போகிறது. கூடவே அந்த பத்து மாதக் குழந்தையும்.  அம்மாவும் அப்பாவும் ஒரே நாளில் அத்தை மாமாவாக ஆனதன் விசித்திரத்தை அந்தக்குழந்தை புரிந்து கொள்ள பல வருஷங்களாகும்.
கவிதா போல் இன்னொரு சவீதாவோ, வனிதாவோ சதீஷ் பெர்வாலுக்கு இன்னொரு மனைவியாக தயாராக இருக்கக்கூடும். காலம் மாறிவிட்டது. கவிதா கூட சதீஷை மறந்துவிட்டு இன்னொரு ரமேஷை மணந்து கொள்ளவும் வாய்ப்புண்டு. வாய்ப்பே இல்லாத ஒரே ஒரு விஷயம். “போங்கடா .. நீங்களும் உங்க பஞ்சாயத்தும்.. எனக்கு என் பொண்டாட்டியும் குழந்தையும்தான் முக்கியம்…எழுந்திரிச்சு வெளியே போங்கடா நாய்ங்களா”
சதீஷ் பெர்வால் சத்தியமாக அப்படிச் சொல்லியிருக்கமாட்டார்.

அதுவொரு பஞ்சாயத்து. ஆலமரம் இல்லை.  நாற்காலி இல்லை. சொம்பு கூட இல்லை. சந்தனத்தை பூசிக்கொண்டு சரத்குமார், வினுச்சக்கரவர்த்தி சாயலில் கூட யாருமில்லை. சுற்றிலும் அறுபதை தாண்டிய வயதிலிருக்கும் கிழவர்கள். கூட்டத்துக்கு நடுவே நின்றபடி ஒரு கிழவர் ஆவேசமாக பேகிறார். இது இந்தப் பஞ்சாயத்தோட தீர்ப்பு. அதுக்கு அல்லாரும்  கட்டுப்பட்டுத்தான் ஆகணும். கட் செய்தால் அடுத்த ஷாட். இது பஞ்சாயத்தோட தீர்ப்பு. கட்டுப்பட்டுத்தான் ஆகணும். அதுதான் இங்கே நடைமுறை. இதுக்கு மேல் சொல்றதுககு எதுவுமில்லை என்று சவுண்ட் பைட் கொடுக்கிறார் இன்னொருவர்.

KS085ஹரியானா மாநிலம் ரோடாக் கிராமம். திருமணமாகி, மூன்று ஆண்டுகள் குடும்பம் நடத்திய பின்னர் கையில் பத்து மாத குழந்தை. சம்பந்தப்பட்ட தம்பதிகளை தீர விசாரித்த பின்னர் இருவரும் அண்ணன், தங்கை என்கிற அரும்பெரும் உண்மையை பஞ்சாயத்தார் கண்டுபிடித்திருக்கிறார்கள். காரணம், இருவரும் ஒரே கோத்ரமாம். ஆறு மணி நேர பஞ்சாயத்துக்குப் பின்னர் அதிரடியான தீர்ப்பு வெளியானது. இனி தம்பதிகள் இருவரும் சகோதர, சகோதரிகளாம்.

ஹரியானா பஞ்சாயத்து அதிரடியான தீர்ப்புகளுக்குப் பேர் போனது. பஞ்சாயத்து பெரிசுகளெல்லாம் சின்ன தம்பி பி.வாசுக்கும் நாட்டாமை கே.எஸ். ரவிகுமாருக்கும் முன் தோன்றிய மூத்த குடிமக்கள். அம்மணமாக்கி அடி கொடுப்பது முதல் ஒரே பெண்ணை இருவருக்கு திருமணம் செய்து வைப்பது வரையிலான பல புரட்சிகர தீர்ப்புகளுக்கு சொந்தக்காரர்கள்.

KS084சதீஷ் பெர்வால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கவிதாவை மணந்தபோது யாரும் தடை சொல்லவில்லை. குழந்தையெல்லாம் பிறந்த பின்னரே சகோதர கள்ள உறவு வெளிச்சத்துககு வந்திருக்கிறது. பஞ்சாயத்தார்களுக்கு இதைவிட வேறென்ன வேலை? அதிரடியாக தீர்ப்பும் எழுதிவிட்டார்கள். 28 நாட்களுக்குள் கவிதா பிறந்த வீடு திரும்ப வேண்டுமாம். சொத்தை விற்று, கடன் வாங்கியாவது 3 லட்சத்தை மகனின் பேரில் டெபாசிட் செய்துவிட்டு சதீஷ் எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டுமாம். நல்லவேளை, மகனை பெற்றெடுத்தார். மகளாக இருந்திருந்தால் இனி தாய் மாமன் ஸ்தானத்தில் இருந்து சீர் வரிசையெல்லாம் செய்யவேண்டும் என்றும் தீர்ப்பு எழுதியிருப்பார்களோ?

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது சம்பந்தமாக யாரும் எங்களிடம் புகார் கொடுக்கவில்லை.  புகார் வந்ததும் தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்கிறது ஹரியானா மாநிலத்தை காக்கும் கடமை தவறாத காவல்துறை.

KS086போன வாரத்தின் பெரிய துன்பியல் சம்பவமாக இதைச் சொல்லலாம். இப்படியெல்லாமா நடக்கும் என்கிற வியப்புதான் பத்தரை மணிக்கு அவசர அவசரமாக சேனல் மாற்றும்போது இருந்தது. போகப்போக விஷயத்தின் தீவிரம் உள்ளுக்குள் இறங்கியது. ஹரியானா என்ன தமிழ்நாட்டிலேயே இப்படித்தான் நடக்கிறது. எங்க ஊர் பக்கம் வந்து நாயக்கர் ஆளுங்கக்கிட்ட கேட்டுப்பாருங்க என்றாள் மனைவி. அதைப் பற்றி இன்னொரு நாள் எழுதலாம்.

இனி என்ன செய்யப்போகிறேன் என்றபடியே அழுத அந்தப் பெண்ணின் சோகமான முகம் அவ்வப்போது கண்முன் வந்து போகிறது. கூடவே அந்த பத்து மாதக் குழந்தையும்.  அம்மாவும் அப்பாவும் ஒரே நாளில் அத்தை மாமாவாக ஆனதன் விசித்திரத்தை அந்தக்குழந்தை புரிந்து கொள்ள பல வருஷங்களாகும்.

கவிதா போல் இன்னொரு சவீதாவோ, வனிதாவோ சதீஷ் பெர்வாலுக்கு இன்னொரு மனைவியாக தயாராக இருக்கக்கூடும். காலம் மாறிவிட்டது. கவிதா கூட சதீஷை மறந்துவிட்டு இன்னொரு ரமேஷை மணந்து கொள்ளவும் வாய்ப்புண்டு. வாய்ப்பே இல்லாத ஒரே ஒரு விஷயம். “போங்கடா .. நீங்களும் உங்க பஞ்சாயத்தும்.. எனக்கு என் பொண்டாட்டியும் குழந்தையும்தான் முக்கியம்…எழுந்திரிச்சு வெளியே போங்கடா நாய்ங்களா”

சதீஷ் பெர்வால் சத்தியமாக அப்படிச் சொல்லியிருக்கமாட்டார்.

Comments are closed.