காயடிப்பு
Saturday, 20. February 2010

ஆளுயுர கட்அவுட்
பத்தடி போஸ்டர்
பாலாபிஷேகம், பீராபிஷேகம்
வெள்ளித்திரை மேல் விழும் சில்லறை
விசிலடிச்சான் குஞ்சுகளின் கூச்சல்
காலம் மாறிவிட்டது.
தமிழனும் மாறிவிட்டான்.

தமிழ்ப்பற்றுக்கு முன்னால்
தமிழனுக்கு
தெருப்புழுதி கூட திருமண்ணாம்
இப்போதெல்லாம்
சினிமா இருட்டில் மட்டுமல்ல
தெருவோரத்திலும் காயடிக்கிறார்கள்.


