ஜெ. ராம்கி என்னும் ஜெ. ராமகிருஷ்ணன். வயது 32. ரஜினி ரசிகன், மனிதன், இந்தியன், தமிழன். வரிசையில் எப்போதும் மாற்றமில்லை. சிதம்பரத்தில் பிறந்து சென்னையில் வாழ்ந்தாலும் மனது எப்போதும் மயிலாடுதுறையில்தான். படிப்பு, ஏவிசி கல்லுரியில் எம் சி ஏ. தொழில் மென்பொருள் கட்டமைப்பு. ஒரே ஒரு மனைவியும், ஒரே ஒரு குழந்தையும் உண்டு.
டிசம்பர் 12, 1995 அன்று ரஜினியை கேள்வி கேட்டதிலிருந்துதான் எழுத்து வாழ்க்கை ஆரம்பமாகிறது.அதற்கு முன் யாருக்கும் கடிதம் எழுதிய அனுபவம் கூட கிடையாது. கல்கண்டில் ஆரம்பித்து குமுதம், ஆனந்த விகடன் என சகல பத்திரிக்கைகளிலும் வாசகர் கடிதங்களாய் எழுதிக் குவித்ததில் எழுத்து ஆர்வமும், மீடியா பரிச்சயமும் ஒட்டிக்கொண்டது.
ஆதர்ஷ குரு, வாத்யார் சுஜாதா. இன்னொரு சுதாங்கனாய் வரவேண்டும் என்ற கனவை, விகடனின் மாணவ நிருபர் திட்டம் கலைத்து போட்டது. லேனா தமிழ்வாணன், வாசக எழுத்தாளராக்கினார். முதல் கேள்வி பதில், முதல் ஜோக்ஸ், முதல் கட்டுரை, முதல் சிறுகதை அனைத்துமே இதயம் பேசுகிறது இதழில்தான். எதை எழுதினாலும் உடனே பிரசுரித்து மணியன் உற்சாகப்படுத்தினார். .
2003ல் மாலன் வலையுலகை அறிமுகப்படுத்தினார். வலைப்பூவில் எழுத ஆரம்பித்த பின்னர், வாசகர் கடிதங்கள் குறைந்து போய் கட்டுரைகள் எழுதும் பிரமோஷன் கிடைத்தது. 2004ல் தமிழோவியத்திற்காக காந்தீய விழுமியங்கள் என்னும் தொடர் எழுத முடிந்தது. கல்கி, இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகளுக்காக பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.
பா.ராகவன் புத்தக உலகை அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் முக்கியமான ஆளுகைகள் பற்றி புத்தகம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினி – சப்தமா? சகாப்தமா? (2005); மு.க (2006), பாகவதர் (2007), ஜெ (2008 ) போன்ற புத்தகங்களின் மூலமாக நல்ல அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து எழுதிய காவிரி, மன்மோஹன்சிங், மதிமுக புத்தகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த பின்னர் ஒரு வழியாக தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் ஓரமாக நிற்க முடிந்ததிருக்கிறது.
வாழ்த்துகளும் வசவுகளும் வரவேற்கப்படுகின்றன. E-mail : Ramkij@gmail.com



ஜெ. ராம்கி Says:
ஹாய் டியர்
Bala Says:
i am not able to access ur site da
Shankar Says:
oppicer,
pazhaya goinchami dhaan naanu. en email-ku oru koral vudungalen :) email id comment-la potrukken.
- sovadu sangar
K.G.Jawarlal Says:
சீமாச்சு உங்களைப் பற்றி அடிக்கடி பேசுவார். வாழ்த்துக்கள். நிறைய திட்டங்கள் இருக்கின்றன. நாமெல்லோரும் ஒன்று கூடினால் நிறைய செய்யலாம்.
http://kgjawarlal.wordpress.com
நன்றி ஜவாஹர். மாயவரம் மாபியா என்றொரு பெரிய கும்பலே இருககிறது. நிச்சயம் செய்யலாம்.
ஜெ. ராம்கி Says:
test
இரவுப் பறவை Says:
வாழ்த்துக்கள் ராம்கி ……
ப்ரியா Says:
நன்றி நண்பரே. நான் எழுதிய புத்தகம் பற்றி விமர்சனம் செய்ததற்காக. மீண்டும் நன்றி. அன்புடன் ப்ரியா கல்யாணராமன்
சேவியர் Says:
ஓரமாய் அல்ல நண்பரே. எழுத்துலக்கில் கம்பீரமாய் நிற்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
சேவியர் Says:
ஓரமாய் அல்ல நண்பரே. எழுத்துலக்கில் கம்பீரமாய் நிற்கிறீர்கள். வாழ்த்துக்கள்…
ஜெ. ராம்கி Says:
வருகைக்கு நன்றி பிரகாஷ்.
ஜெ. ராம்கி Says:
வாழ்த்துககு நன்றி சேவியர். உங்கள் கவிதைக்கு நான் அடிமை. எந்தக் கவிதையென்று சொல்லவும் வேண்டுமோ? :-)
பாசகி Says:
சில்லுண்டியிஸம் சூப்பர். தலைவர் வருவாரா :)
இன்னைக்கு வாத்தியாரோட ஏன்?எதற்கு?எப்படி? படிச்சுட்டிருந்தேன், அப்போ நீங்க கேட்டிருந்த யூனிக்கோட் பத்தின கேள்வி கண்ணுலப்பட்டுது. பகிர்ந்துக்கணும்-னு தோணுச்சு :)
வாழ்த்துகள்-ஜி!
ஜெ. ராம்கி Says:
நன்றி பாசகி.
பயம் வேண்டாம், தலைவர் வரமாட்டார்! :-)